Home » » வட்டுவாகலில் சரணடைந்த முக்கிய வி. புலித் தளபதிகள் – நக்கீரன்

வட்டுவாகலில் சரணடைந்த முக்கிய வி. புலித் தளபதிகள் – நக்கீரன்

Written By DevendraKural on Saturday, 26 October 2013 | 02:47

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? வட்டுவாகலில் சரணடைந்த முக்கிய வி. புலித் தளபதிகள் – நக்கீரன்
ன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொலை செய்துவிடுமாறு விடுக்கப்பட்ட உத்தரவைப் பின்பற்றியிருந்தால், வவுனியா சிறையில் காவலர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருக்காது என மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தபாய இராஜபக்சே தெரிவித்ததாக லங்கா நியூஸ் வெப் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.  கடந்த 2012 யூன் மாதம் வவுனியாவில் சிறைக் காவலர்கள் மூவரைப் பிடித்துவைத்து தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இத்தகைய சம்பவங்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற உணர்வை அவ்வியக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு ஏற்படுத்தும் என கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளதாக இச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் லங்கா நியூஸ் வெப் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமை தாங்கிய படைத்தரப்பின் 55 ஆவது மற்றும் 59 ஆவது படைப்பிரிவுகள்         வெற்றிலைக்கேணி கடற்படைப் பக்கமாகவும், முல்லைத்திவில் இருந்தும் படை நகர்வுகளை மேற்கொண்டிருந்தன. இறுதிக் கட்டப் போரின் போது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான படைத்தரப்பின் 59 ஆவது படைப்பிரிவால் கைது செய்யப்பட்ட கடற்புலிகளின் தலைவர்களில் ஒருவரான சசிகுமார் என்பவரே வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு யூனில் இடம்பெற்ற சம்பவத்தின் போது முன்னிலை வகித்திருந்தார்.  இப் போரின் போது கைது செய்யப்படுகின்ற மற்றும் சரணடைகின்ற விடுதலைப் புலிகளின் போராளிகள் அனைவரையும் கொலை செய்து விடுமாறு கோத்தபாய இராஜபக்சே             படைத்தரப்பின் எல்லாத் தளபதிகளுக்கும் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டிருந்தார்.
அம்பலவன்பொக்கனை மற்றும் நந்திக் கடல் பகுதியில் படை நடவடிக் கையில் ஈடுபட்டிருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையிலான படைத்தரப்பின் 53 ஆவது படைப் பிரிவால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப் பிரிவைச் சேர்ந்த 303 போராளிகள் கோத்தபாயாவின் உத்தரவுக்கமைய படுகொலை செய்யப்பட் டனர். இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசன் மற்றும் புலித்தேவன் போன்றோரை படைத் தரப்பின் 58 ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் படுகொலை செய்திருந்தார்கள்.  ஆனால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சா விடுத்த உத்தரவை மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் பின்பற்றவில்லை. மாறாக கைது செய்யப்பட்ட ஒவ்வொரு விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்த விபரங்களை அவர் புகைப்படங்களுடன் பதிவு செய்து இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர் என லங்கா நியூஸ் வெப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னிப் போரின் பின்னர் பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீது போர்க் குற்றச்சாட்டுக் கள் சுமத்தப்பட்டதோடு இவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமையை நீக்குமாறு கோரி உலகத் தமிழர் பேரவையின் சார்பில் கடந்த  2012 மார்ச் மாதம் 30 ஆம்  நாள்  பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் நாடு திரும்பியிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்ட வகையில் மேஜர் ஜெனரல் பிரசன்ன தலைமையிலான படைப்பிரிவினர் தாக்குதல்களை மேற்கொண்டதாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
நடேசன், புலித்தேவன், இரமேஷ் மற்றும் சுமார் 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அதே நேரத்தில் (மே 18, 2009) வி.புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.  இதில் சிலர் தங்களது குடும்பத்தோடு சரணடைந்தார்கள்.
வட்டுவாகல் பாலத்தினை மக்கள் கடந்து சென்ற போது இராணுவத்தினர்  மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.
மே 18 ஆம் நாள் காலையில் சரணடைந்த புலிகளின் தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர், குட்டி, எழிலன், கரிகாலன் போன்ற சுமார் 50 பேரை வட்டுவாகலில் வைத்துப் பேருந்து ஒன்றில் படையினர் ஏற்றிச் சென்றார்கள்.
சரணடைந்த வி.புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியுள்ளது. குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமகள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உண்டு. இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குச் சென்ற இச்சாட்சிகள், பின்னர் விடுதலையாகி வெளியே வந்து தாம் நேரில் கண்டதை கூறியுள்ளார்கள். இதனை நேரில் பார்த்த சாட்சியங்களுக்கு அமைவாக                 இப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து இலங்கை இராணுவம் இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இலங்கை இராணுவத்தின் அறிக்கை ஒன்றின் படி, தம்மிடம் இனி எவரும் இல்லை என்றும், இரகசிய முகாம்கள் என்று ஒன்றும்  இயங்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (JVP News)
இராணுவம் வர்களை இரகசியமான தடுப்பு முகாம்களில் வைத்திருப்பதாக அண்மைக்காலம் வரை ஒரு நம்பிக்கை இருந்தது.  மே 18, 2009 அன்று காலையில் சரணடைந்த பின்னர் காணாமல் போன புலிகளின் தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர் உட்பட ஒரு  தொகுதியினரது பெயர்ப் பட்டியல்  இப்போது கிடைத்துள்ளது:
1.  செல்வராகா – மணலாறு கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவர்
2.  பாஸ்கரன்    -  மணலாறு கட்டளைப் பணியக தளபதிகளில் ஒருவர்
3.  வேலவன்  -   இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி
4.  தளபதி லோறன்ஸ்
5.  தளபதி குமரன்
6.  இளந்திரையன்  – விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர்
7.  பிரபா  மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவர்
8.  சோ. தங்கன் - அரசியல்துறை துணைப் பொறுப்பாளர்
9.   ரூபன் – வழங்கப்பகுதி பொறுப்பாளர்
10. பாபு   -  நகை வாணிபங்களின் பொறுப்பாளர்
11.  வீரத்தேவன் – தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர்
12.  கி. பாப்பா – தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்
13. இராஜா (செம்பியன்) -  தமிழீழ விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள்
14.  கானகன் -  தமிழீழ அரசியல் துறை
15. வெ. இளங்குமரன் (பேபி சுப்பிமணியன்) - தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர். மற்றும் அவரது மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள் அறிவுமதி
16.  அருணா – தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவ
ர்
17. க.வே. பாலகுமாரன் – விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்  மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளிஅய்ங்கரன்
18.  சொ.நரேன் – தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர்
19.  பிரியன்  – தமிழீழ நிருவாக சேவை பொறுப்பாளர்  மற்றும் அவரது குடும்பம்
20.  வீ. பூவண்ணன் – தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர்
21.  தங்கையா – தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர்
22.  மலரவன்  – தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவர்
23.  பகீரதன்  – தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவர்
24.  குட்டி  -  தமிழீழ போக்குவரத்துக் கழக பொறுப்பாளர்
25.  புதுவை இரத்தினதுரை – தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர்
26.  எழிலன் (சசிதரன்) -   திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்
27.  இளம்பரிதி  -  யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்
28.  விஜிதரன் – அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர்
29.  வீமன்  – தளபதிகளில் ஒருவர்
30.  சக்தி  – வனவள பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் மற்றும் அவரது  குடும்பம்
31.  இ. இரவி – சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்
32.  சஞ்சை – முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்
33.  பரா ராதா  -  நீதி நிர்வாகப் பொறுப்பாளர்
34.  யோகி யோகரத்தினம்  – சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர்
35.  குமாரவேல் – இராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவர்
36.  ரேகா – தமிழீழ மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர்
37.  சித்திராங்கன்  -  மணலாறு மாவட்ட கட்டளைத் தளபதி
38.  சுகி  – மாலதி படையணித் தளபதிகளில் ஒருவர்
39.  அருணன் – கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவர்
40.  மனோஜ்  – மருத்துவப் பிரிவு
41.  லோறன்ஸ்  – நிதித்துறையைச் சேர்ந்த ஒருவர்
42.  வீரத்தேவன் -  தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர்
இந்தப் படடியில் நிறைவானது அல்ல. மேலும் பலர் சரணடைந்து இருக்கலாம்.   சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தவில்லை.
மே 2009 இல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  தினமின செய்தித்தாள்  வெளியிட்ட செய்தியிலும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையிலும் பாலகுமாரன் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
சண்டே ரைம்ஸ் வார இதழ்  அதன்  மே 31,  2009 நாளிட்ட பதிவில் கரிகாலன், பாலகுமாரன், இளங்குமரன், யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை, பாப்பா, தங்கன், லோறன்ஸ் திலகர், இளப்பரிதி, பூவண்ணன்  போன்ற புலி கெரிலாக்கள்   இடம்பெயர்ந்த மக்களை தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருப்பது  இராணுவத்தால் கண்டு பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது.  ஆனால் இராணுவ  பேச்சாளர் உதய நாணயக்கார அதனை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.  மகளிர் அணித் தலைவி தமிழினி மாத்திரம்  காவலில் இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்றார்.  (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32251)
பாலகுமாரன் கைது செய்யப்பட்டு இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இராணுவத்தினரின் இணையத்தளத்தில் அப்போது வெளியிடப்பட்டிருந்தது. அது சில நாட்களில் அந்த இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த ஒளிப்படம் வேறு செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வெளியாகும் Sri Lanka Guardian  10-08-2010 இல் வெளிவந்த பதிப்பில் பாலகுமாரன் மற்றும் அவரது மகன் ஒரு மரவாங்கிலில் அருகருகே வீற்றிருக்கும் படத்தை முதல் முறையாக வெளியிட்டது.  அதன் பின்புலத்தில்  சீருடை அணிந்த ஒரு இராணுவத்தினன் நடந்து செல்வது பதிவாகியிருக்கிறது. (http://www.srilankaguardian.org/2010/08/v-balakumaran-killed-or-still-alive.html)
சண்டே ரைம்ஸ் செய்தி, சரணடைந்த புலிகளின் தலைவர்கள் உயிருடன் - இரகசிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தியிருந்தது. பின்னால் அந்த நம்பிக்கை முற்றாகவே உடைந்து போய்விட்டது.
அமைச்சர் டியூ.குணசேகர, பாலகுமாரனும் யோகியும் தடுப்பு முகாம்களில் இல்லை என்றும் அவர்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.    (http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100720_dewwidows.shtml)
சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரியாக செயற்படும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுகந்த இரணசிங்க தங்களிடம் யோகி பாலகுமாரன் ஆகியோர் இப்போது இல்லை (he did not have them) என அண்மையில் தெரிவித்திருக்கிறார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாலகுமாரன் அவர்களிடம் எப்படி இல்லாமல் போனார்கள் என்பதை பிரிகேடியர் இரணசிங்க தெரிவிக்கவில்லை.
வி. புலித் தளபதிகள் இராணுவத்திடம்  சரணடைந்ததை கண்ணால் பார்த்தவரும் சரணடைந்தவர்களில் ஒருவரும்  திருகோணமலை மாவட்ட அரசியல்  பொறுப்பாளர் எழிலனின் துணைவியுமான அனந்தி சசிதரன் அவர்களை   பிபிசி தமிழோசை வானொலி செப்தெம்பர் 18, 2010   அன்று  நேர்காணல் கண்டது. பேச்சு நடையில் பிபிசி ஒலிபரப்பாளர் கேட்ட கேள்விகளையும் அவற்றுக்கு அனந்தி இறுத்த பதில்களையும் அடுத்த முறை பார்ப்போம் (வளரும்)
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்