Home » , » சுற்றுலா தளங்களில் வசிக்கும் பெண்களுக்கான வருமானத்தை தரும் ஆன்லைன் வேலைகள்

சுற்றுலா தளங்களில் வசிக்கும் பெண்களுக்கான வருமானத்தை தரும் ஆன்லைன் வேலைகள்

Written By DevendraKural on Saturday, 19 October 2013 | 11:37

தொழிற்களம் பதிவுகளின் மூலமாக அறிமுகமான வாசகி ஒருவர் வீட்லிருந்தபடியே, பெண்கள் பகுதி நேரமாக செய்வதற்கான வேலைகள் ஏதுமிருந்தால் ஆலோசனை வழங்குமாறு கேட்டிருந்தார். அவரின் சூல்நிலைக்கு  எற்ப செய்யக்கூடிய பகுதி / முழு நேர தொழிலாக திட்டமிட்ட இந்த பகிர்வு  மற்றவர்களுக்கும் பொதுவாக பலனளிக்கக் கூடும் என்பதால், தொழிற்களம் மூலமாக உங்களை வந்தடைந்திருக்கிரது.

    சுற்றுலா தளங்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் வசிப்பவரா நீங்கள். உங்களுக்கு ஒரு நல்ல வருமானத்தை தரக்கூடிய பகுதி / முழு நேர தொழிலாக முயற்சித்து பாருங்கள்

ஊட்டி, கொடைக்கானல், மூனாறு, தேக்கடி மற்றும் இன்னும் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அங்கே சீசன் டைம் என்றால் மக்கள் ஏராளமாக குவியத்துவங்கி விடுவார்கள்.


பொதுவாக மார்ச் மாதம் துவங்கி ஆகஸ்ட் வரை சீசனுக்கு செமையாக  கல்லா கட்டிவிடும்.  இதர நாட்களிலும் கனிசமாக உங்கள் வருமானத்தை பெருக்க மாற்று வழிகளும் இங்கே பகிரப்பட்டிருக்கிறது.

தங்கும் விடுதியை முன்பதிவு செய்து கொடுக்கலாம்.

       நீங்கள் செய்ய வேண்டியது முதலில் உங்கள் ஊரில் உள்ள அனைத்து நல்ல தங்கும் விடுதிகளையும் அலாசி ஆராயுங்கள். பொதுவாக இந்த முன்பதிவு வேலையை நாம் ஆன்லைனில் தான் செய்யப்போகிறோம். ஆக, வாங்கும் திறனுள்ள வசதிபடைத்த நபர்கள் உங்கள் இலக்கு. அவர்கள் அதிக வசதியான தங்கும் விடுதியை எதிர்பார்ப்பார்கள். சீசன் சமயத்தில் அனைத்து விடுதிகளும் புக்கிங் ஆகிவிடும் என்பதால் அவர்களுக்கு,  கிடைக்கும் ஏதாவது லாட்ஜை புக் செய்ய வேண்டியிருக்கிறது.   

வசதியான ராயல் விடுதிகள் போன் மூலமும் அவர்களது இணையதளம் மூலமும் ஆன்லைன் புக்கிங் செய்வதை கண்டு சந்தை அபாயம் கொள்ள வேண்டாம். காரணம் நாம்அவ்வாறான லாட்ஜ்கள் பலவற்றை நேரடியாகவே நம் இணைப்பில் வைத்திருப்பதால் நாளடைவில் வாடிக்கையாளர்கள் நமது சேவைக்கு மாறிவிடுவார்கள்.

ஆக,  எப்படியும் 50லிருந்தி 100 நல்ல தரமான தங்கும் விடுதிகள் உங்கள் பகுதியில் இருக்கும். அங்கு நீங்கள் நேரடியாகவே சென்று உங்களுக்கான முகவரி அட்டையை கொடுத்து உங்கள் சேவைக்கு தேவையான அவர்களின் வாடகை விபரங்கள்,  பாதுகாப்பு விபரங்கள், வசதிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்து அவர்களது முகவரி அட்டையையும்  அலைபேசி எண்ணையும் வாங்கி வந்து அதை ஃபைலாகவும், கணினியிலும் பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள்.


பொதுவாக விடுதிகள் உங்களுக்கு கமிசன் தொகை கண்டிப்பாக 10% கொடுப்பார்கள். அது போலவே உங்களின் வாடிக்கையாளர்களிடமும் 10% வரை சேவைக்கட்டணமாக வாங்கலாம்.

நாளொன்றுக்கான குறைந்தபட்ச வாடகை ரூ.850 என்றாலும் செலவு போக கமிசன் ரூ.150 கிடைக்கும்.

இதேபோலவே டிரவல்ஸ் கார்கள், பஸ்கள் போன்றவற்றையும் முன்பதிவு செய்துகொள்ளலாம்..

       சில சுற்றுளா தளங்களில் நல்ல கைடும் கூட தேவைப்படுவார்கள். ஆக எப்படியும் ஒரு நல்ல வருமானத்தை பெற வாய்ப்புள்ளது.

எப்படி வாடிக்கையாளர்களை பெறலாம்..?

         உள்ளங்கையில் உலகத்தை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் அதிகமா கேள்வி கேட்க கூடாது.

       முதலில் உங்களை சோக்காக காமித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கென்ற தனிப்பட்ட லேண்ட் லைனும், அலைபேசி எண்ணும் அவசியம். மேலும் நல்ல பிராண்ட் நேம் வைத்து உங்களுக்கான ஒரு இணையத்தளம் உருவாக்கிக்கொள்ளுங்கள்.  கூடவே அதிக பேர் பயன்படுத்தும் இரண்டு வங்கிகளிலாவது உங்கள் சேமிப்பு கணக்கையும் துங்கிக்கொள்ளுங்கள்.

       அவ்வாறு இணைய தளம் உருவாக்கும் வசதி இல்லையென்றாலும் கவலை வேண்டாம், இலவச இணைய தளங்களை உருவாக்கித்தர ஆயிரம் நிறுவனங்கள் இருக்கின்றன. எனக்கு தெரிந்து கூகுள் பிளாக்கர் தளமே இதற்கு போதும். விரும்பினால் டொமைன் மட்டுமாவது சொந்தமாக டாட்-காமில் வாங்கிக்கொள்ளுங்கள் ( அதிகபட்சம் ரூ.750 தான் செலவாகும் ( பதிவிடும் நாள் செப்.2013) ).

முக்கியமாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தனிப்பக்கம் உங்கள் நிறுவனத்தின் பெயரில் திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.

படிப்படியாக உங்கள் பேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர் நண்பர்களுக்கு உங்கள் சேவைகளை தெரியப்படுத்துங்கள். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் உடனே பார்க்கும்படியான ஆஃபர்களை கொடுங்கள், 

எக்காரணத்தைக் கொண்டும் அதிக இலாபம் பார்க்க எண்ணி உங்கள் வாடிக்கையாளர்களை இழந்துவிடாதீர்கள். அவர்கள் பாதுகாப்பிற்கு நீங்கள் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருமுறை உங்கள் சேவையால் மகிழ்ந்த நண்பர் நூறு நபர்களையாவது உங்களுக்கு அறிமுகப்படுத்திவிடுவார் தனது வாழ்நாளில்....

ஆக, சீசனுக்கு சூப்பரா நல்ல லாபம் பார்த்திடலாம் தானே..!!!

இருங்க,, இன்னமும் கொஞ்சம் பிஸினச டெவலப் பண்ணலாம்.

     பொதுவாக நாளிதல் விளம்பரங்களை கவனியுங்களே.. ஏகப்பட்ட இன்பச்சுற்றுலா நடத்தும் நிறுவனங்களின் விளம்பரங்களை பார்க்கலாம். நீங்க ஏன் ஒரு ஆறுமாசம் நல்லா எக்ஸ்பீரியன்ட் ஆனதுக்கப்பறம் இதை பன்னக்கூடாது..?

கம்ப்யூட்டர ஆன் பன்னுங்க,, ,உங்க பழைய, புதிய வாடிக்கையாளர்களுக்கு திரும்ப ஒரு ஹாய் சொல்லிவிட்டு,  ஏரியா வாரியாக பிரித்து ஒரு நாள் குறித்துவிட்டு டூர்பஸ் அல்லது  டிரைன் டிக்கெட் புக் செய்யுங்க. தலைக்கு இவ்ளோன்னு கட்டணம் போடுங்க. 

   குறைந்தது கோயம்பத்தூரிலிருந்து கொடைக்கானலுக்கு இன்பச்சுற்றூலான்னு போட்டாலும் ஒரு பஸ்ஸுக்கு தேவையான 50 வாடிக்கையாளர்களை பிடிப்பது ஒன்னும் அவ்வளவு கஸ்டமான காரியமா அப்போ உங்களுக்கு இருக்காது. ஆக, எப்படியும் ஒரு இரண்டு நாள் இன்பச்சுற்றுளாவிற்கு ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திவிட்டால் கனிசமாக 10,000 ரூபாயாவது கையில் நிக்கனும். கணக்கு போட்டு கூட 20% கழிவு செலவாக தீர்மானித்து. அதற்கேற்ப உங்கள் இன்ப சுற்றுலாவிற்கான கட்டணத்தை வெளியிடுங்கள்.  முதல் வருடம் ஒரு 10 பஸ் ஏற்பாடு செய்யலாம். படிப்படியாக இதை உயர்த்திக்கொண்டே போக வாய்ப்பும் உள்ளது.         ஆரம்பத்தில் நீங்கள் உங்கள் கணவரின் உதவியுடன் அல்லது நண்பர்களின் உதவியுடன் துவங்குங்கள். நாலடைவில் தனியாக ஒரு அலுவலகம் அமைத்து வேலைக்கு தகுந்த நபர்களை அமர்த்திக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட வேலையில் சில அசெளகரியங்களும் இருக்கிறது. கடைசி நேரத்தில் விடுதியாளர் ரூம் மாற்றி கொடுப்பது, டிரவல்ஸ் லேட் அல்லது பழுதாகி நிற்பது போன்று குடைச்சல் தரும் போது வாடிக்கையாளர் உங்களை கேட்பார். ஆனால், நல்ல வாடிக்கையாளர்கள் நல்ல நிறுவனங்கள் உங்கள் கண்களுக்கு விரைவில் அகப்பட்டு விடும்.

     வாடிக்கையாளர் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதுமே அடுத்த நிமிடம் நீங்கள் புக் செய்து விட வேண்டும். அந்த பணத்தில் உங்கள் சொந்த விசயங்களுக்கு பயன்படுத்தி விட்டு கைய பிசையக்கூடாது சரியா..?

       இன்னும் உங்கள் ஊரின் பிரதான கலைப்பொருட்கள், இனிப்புகள் என்று எது இருந்தாலும் அதையும் ஒருகை பார்த்து விடுங்கள்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்