Home » » விஷம் வைத்து யசீர் அரபாத் கொல்லப்பட்டுள்ளார்- மனைவி சுஹா

விஷம் வைத்து யசீர் அரபாத் கொல்லப்பட்டுள்ளார்- மனைவி சுஹா

Written By DevendraKural on Friday, 8 November 2013 | 01:56


பல­ஸ்தீன விடு­தலை இயக்­கத்  த­லைவர் யசீர் அரபாத்  போலோ­னியம் என்ற விஷம் வைத்துக் கொல்­லப்­பட்­ட­தாக அவ­ரு­டைய மனைவி சுஹா தெரி­வித்­துள்ளார்.

பலஸ்­தீன விடு­தலை இயக்கத் தலைவர் யாசீர் அரபாத் 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி  தனது 75 ஆ-வது வயதில், பிரான்ஸில்  உயி­ரி­ழந்தார். அவ­ரது மனை­வியின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அப்­போது அவ­ரது உடல் பிரேதப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

2006 ஆ-ம் ஆண்டில் ரஷ்­யாவின் முன்னாள் உள­வுத்­துறை பிரி­வி­னரும், ரஷ்ய அரசின் விமர்­ச­க­ரு­மான அலெக்­சாண்டர் லிட்­வி­னென்கோ படு­கொலை செய்­யப்­பட்­ட பின், அர­பாத்தும் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் வலுத்­தது. இதனால், 2012ஆம்  ஆண்டு நவம்பர் மாதம் இவ­ரது உடற்­ப­கு­தியில் எஞ்­சி­யி­ருந்த பாகங்கள் தோண்டி எடுக்­கப்­பட்டு பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டன.

பிரான்ஸ், சுவிட்­சர்­லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடு­க­ளிலும் இந்த சோத­னைகள் தனித்­த­னியே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் சுவிட்­ஸர்­லாந்தின்  லுசேன் சட்ட வைத்­திய நிலை­யத்தின் கதி­ரி­யக்கப் பிரிவில் பணி­பு­ரியும் எட்டு விஞ்­ஞா­னிகள் மொத்தம் 75 மாதி­ரி­களில் ஆராய்ச்சி மேற்­கொண்டு தங்­களின் முடி­வு­களை  தெரி­வித்­துள்­ளனர்.

இவற்றில் அர­பாத்தின் இரத்தம், சிறுநீர்க் கறைகள் பட்­டி­ருந்த துணி­களில் உயர் கதிர்­வீச்சு தன்மை கொண்ட போலோ­னியம் படி­மங்கள் இருந்­ததை இந்தக் குழு­வினர் உறுதி செய்­துள்­ளனர். 

ஸ்விட்­சர்­லாந்து நாட்டின் தட­வியல் அறிக்­கையை ஆய்வு செய்த யசீர் அர­பாத்தின் மனைவி சுஹா நேற்று முன்­தினம் பாரிஸ் நகரில் வைத்து செய்­தி­யா­ளர்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, எனது கணவர் (யசீர் அரபாத்) இயற்கை மர­ணத்தால் உயிர் இழக்­க­வில்லை. அவர் போலோ­னியம் என்ற விஷத்தால் கொல்­லப்­பட்­டுள்ளார் என்­ப­தற்­கான அறி­வியல் பூர்­வ­மான ஆதா­ரங்கள் என்­னிடம் உள்­ளன. 

அவ­ரது மரணம் இயற்­கை­யா­னது அல்ல. அர­சியல் படு­கொலை தான் என்ற எனது சந்­தேகம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக எந்த நாட்டையும் எந்த தனிநபரையும் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்