Home » » அரசியல் அரங்கில் தேவேந்திரர்களின் நிலை என்ன?

அரசியல் அரங்கில் தேவேந்திரர்களின் நிலை என்ன?

Written By DevendraKural on Saturday, 25 January 2014 | 22:49

அரசியல் அரங்கில் தேவேந்திரர்களளின் நிலை என்ன? ( அரசியலில் ஆதரவற்ற அனாதைகளாய் ஆனதற்கு என்ன காரணம் ?)

அ.தி.மு.க மற்றும் தி.மு.க வில் இணைய வேண்டாம் அங்கே போனால் எம்மால் வளர முடியாது அங்கே தேவர் சமூகத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது தேவேந்திரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இது தான் அன்றைய இழிநிலை சமூகமாய் விழிப்புணர்வற்று அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட காலத்து எம் சமூக பெரியவர்களின் சிந்தனையாக இருந்தது இன்றும் இருக்க்கிறது.

அரசியல்

ஒன்றை உற்றுநோக்குங்கள் உங்கள் ஊரிலோ, தெருவிலோ அல்லது உங்கள் பகுதியிலோ தி.மு.க விலும் அ.தி.முகவிலும் தேவேந்திரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கிட்டு பாருங்கள் 99% தேவேந்திரர்கள் தலைவர் ஜான்பாண்டியன் பின்னாலும் டாக்டர் கிருஷ்ணசாமியின் பின்னாலும் தான் நிற்பார்கள் மீதமுள்ள அந்த 1% தினர் தான் ஆளும் அல்லது எதிர்கட்சியின் உறுப்பினராக இருப்பர் அந்த 1% தினரும் சாதி அரசியலை கடந்து பொது அரசியலில் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு உழைக்க முயன்றால் எம் சமூக மக்கள் அவர்களுக்கு வைக்கும் பெயர் இன துரோகி.

(நான் கேட்கிறேன் எம் சமூக முன்னேற்றத்தின் மேல் துளி அளவு அக்கறையும் இல்லாமல் தன சுயநலமே பெரிதென நினைத்து சமூக முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்பட மறுத்து எம் சமூகத்தின் விலை மதிக்கமுடியாத ஓட்டுகளை சிதறடித்து எம் சமூகத்தை அரசியலில் ஆதரவற்ற அனாதைகளாய் ஆக்கி கொண்டிருக்கும் தலைவர் ஜான்பாண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாயியையும் விடுத்து பொது அரசியலில் நுழைந்தால் அவர்கள் இன துரோகிகளா பதில் சொல்லுங்கள் சொந்தங்களே.)

அதே ஒரு தேவர் மட்டுமே வாழும் ஊரையோ, தெருவையோ, பகுதியையோ கணக்கிட்டு பார்த்தீர்களானால் 99% பேர் தி.மு.க , அ.தி.மு.க , காங்கிரஸ். பி.ஜே.பி போன்ற கட்சிகளில் இருப்பதுடன் தங்கள் சாதியை சார்ந்த கட்சி உறுப்பினர்களின் பலத்துடன் அந்த கட்சிகளின் தவிர்க்கமுடியாத நபராக திகழ்ந்து கொண்டிருப்பர் மீதம் உள்ள 1% தினர் அந்த 99% கட்சியினரை பொருளாதார பக்கபலமாக வைத்து கொண்டு சாதி சங்கம், சாதி தலைவர் என தங்கள் சாதியின் வெறியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பர், சண்டை என வரும்போது கட்சி மறந்து சாதிக்காரனாய் களத்தில் நிற்கவும் தயங்குவதில்லை தேவர்கள்.

தேவர்களின் அரசியல் வெற்றிக்கும் தேவேந்திரர்களின் அரசியல் தோல்விக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் இதுதான் ஆம் நாம் 99% பேர் சாதி அரசியல் செய்துகொண்டு 1%த்தினர் பொது களத்தில் நிற்கிறோம் தேவர்கள் அப்படியே எமக்கு எதிர்மறையாய் அரசியலில் நிற்கின்றனர் 

மேலும் தி.மு.க அல்லது அ.தி.மு.க வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத உங்கள் சமூகத்திற்கு எப்படி அந்த கட்சி அதிகார பகிர்வை வழங்கும்? எப்படி உங்களால் எதிர்பார்க்க முடிகிறது? அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் நாமும் நம் சமூகத்தவரும் தான் முட்டாள்களாக இருக்கிறோம் அதனால் தான் ஆளும் அனைத்து கட்சிகளும் எம்மை எட்டி உதைதிருகிறது.

பல நேரம் நான் வியந்ததுண்டு பல ஒன்றியங்களில் 60%க்கும் மேலானவர்கள் எம் சமூகத்தவர்கள் தான் அனால் அங்கே தி.மு.க, அ.தி.மு.க என எந்த கட்சியானாலும் அங்கே ஒன்றிய தலைவராய் ஒரு சிறுபான்மை சாதியினர் தான் வீட்டிருகின்றனர் எங்கும் ஒன்றிய தலைவராய் கூட தேவேந்திரர்கள் இல்லையே ஏன் என்றும், மேலும் 15ற்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில் 25லிருந்து 30%ற்கும் மேலான வாக்கு வங்கி கொண்ட சமூகமாக தேவேந்திர குல வேளாளர் சமூகம் இருந்தாலும் அ.தி.மு.கவிலும் தி.மு.க விலும் ஒரு மாவட்ட தலைவர் கூட தேவேந்திரர்கள் இல்லையே ஏன்? இவ்வளவு பலம்வாய்ந்த வாக்குவங்கி கொண்ட எம் சமூகதை சுலபமாக புறக்கணிக்கிறார்களே எப்படி? என நான் ஆராய்ந்த போது தான் அறிந்தேன் எங்கே கோட்டைவிடுகிறோம் என்று.

ஒரு ஒன்றியத்தில் 50,000 (ஐம்பதாயிரம்) தேவேந்திரர்கள் இருக்கிறார்கள் என்றால் 50 பேர் தான் தி.மு.க அல்லது அ.தி.மு.க வின் உறுப்பினராய் இருக்கின்றனர் அதே ஒன்றியத்தில் 500 தேவர் இருந்தால் 300 பேர் தி.மு.க அல்லது அ.தி.மு.க வின் உறுப்பினராய் இருக்கின்றனர்,அதே போல் ஒரு மாவட்டத்தில் 500000 (ஐந்து லட்சம்) தேவேந்திரர்கள் இருக்கிறார்கள் என்றால் 500 பேர் தான் தி.மு.க அல்லது அ.தி.மு.க வின் உறுப்பினராய் இருக்கின்றனர் அதே மாவட்டத்தில் 100000 (ஒரு லட்சம்) தேவர் இருந்தால் 60,000 பேர் தி.மு.க அல்லது அ.தி.மு.க வின் உறுப்பினராய் இருக்கின்றனர். கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து தான் பொறுப்புகள் வழ்கங்கப்படுகிறதே ஒழிய அந்த பகுதியில் எந்த சாதியினர் மிகுதியானவர்கள் என்பதை வைத்து அல்ல.

இப்பொழுது புரிகிறதா உங்களால் ஒன்றியதலைவராகவோ மாவட்ட தலைவராகவோ ஏன் வரமுடியவில்லை என்று? சாதி தலைவர்களின் பின்னால் நிற்கும் மூடர்கூட்டமான நமக்கு தலைவர் ஜான்பாண்டியனும் டாக்டர் கிருஷணசாமியும் நடத்தும் சாதி கட்சிகளின் மாவட்ட தலைவராக தகுதி இருக்கிறதே ஒழிய நிச்சியமாக தி.மு.க அல்லது அ.தி.மு.க போன்ற ஆளும் கட்சிகளின் மாவட்ட தலைவராய் இருக்க தகுதி அற்றவர்கள் தேவேந்திரர்கள் என்பதை ஒப்புகொள்கிறீர்களா? 

ஏன் இந்த நிலை? என்று மாறப்போகிறது எம் சமூகம்? அதற்கு என்ன செய்ய வேண்டும் நாம்? என்கிற கேள்வி உனக்குள் எழுகிறதென்றால் நீயும் நானும் இரத்த உறவு அப்படி இல்லையா உனக்குள் ஓடுவது ஒரு தேவேந்திரனின் குருதியாக இருக்காது.

எம் சமூகம் அரசியல் அங்கீகாரம் பெறவேண்டும், எம் சமூகத்தின் மேல் படிந்திருக்கும் தலித் என்ற இழிநிலை அகல வேண்டும், எம் சமூகம் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டும் என்கிற ஆவல் என்னைப்போல் உங்களையும் தூங்கவிடாமல் செய்கிறதென்றால் சாதீய அரசியலை விடுத்து தி.மு.க, அ.தி,மு.க, பி.ஜே.பி, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உறுப்பினர்களாய் மாறி பொது அரசியலுக்கு வாருங்கள் சொந்தங்களே! எதிர்வரும் எம் சந்ததியாவது அரசியலில் அதிகார பகிர்வை பெற்று ஆதிக்க செருக்குடன் வாழட்டும்.

வென்றாக வேண்டும் தேவேந்திரகுலம்! அதற்கு ஒன்றாக வேண்டும் தேவேந்திரர்கள்!! 


முக்கிய குறிப்பு: எம் சமூக தலைவர்கள் இனைந்தால் சாதீய அரசியலாலும் கூட எம் சமூகத்திற்கான அரசியல் அதிகார பகிர்வை பெற இயலும் ஆனால் அவர்களின் இணைவு என்பது சாத்தியப்படாத ஒன்றாகவே மாறிவிட்டதால் எம் ஓட்டுக்களின் சிதைவு எமக்கான அரசியல் அங்கீகாரத்தை சிதைத்து விடுகிறது ஆதலால் தங்கள் சுயநலமே பெரிதன நினைத்து எம் சமூக நலன் மேல் சிறிதளவு அக்கறையும் இன்றி இணைய மறுக்கும் தலைவர் ஜான்பண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் விடுத்து மக்களாகிய நாம் மாறுவது தான் புத்திசாலித்தனம். என் சமூக மக்களை புத்திசாலிகள் என்றே நான் நம்புகிறேன் நல்ல முடிவை எடுங்கள் சொந்தங்களே.. வெற்றி நமதாகட்டும்!!! 

சமூக பணியில் உங்கள் சகோதரன் 
பிரபு.ரா.வசந்த்ராம்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்