Home » » பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடத்தில் தங்க கவசம் அணிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடத்தில் தங்க கவசம் அணிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

Written By DevendraKural on Monday, 3 February 2014 | 05:10

பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா .

கடந்த வருடம் நான் பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடம் சென்றிருந்த போது முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க தங்க கவசம் செய்ய அளவெடுத்துக்கொண்டிருகிரார்கள் என்ற ஒரு பதிவை எம் வளைதலங்களில் பதிவிட்டிருந்தேன்.

பிப்ரவரி 9ல் அதை சாத்த வருகிறார் ஜெயலலிதா இதை எம் சமூக சொந்தங்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர் சாதி வெறி பிடித்த மிருகத்திற்கு ஒரு தனிப்பட்ட சாதிக்கான ஆதரவு நிலைப்பாடு என முழக்கமிடுகின்றனர். நண்பர்களே உங்கள் உணர்ச்சி மிகுதியில் வெளிப்படும் வார்த்தைகளை நான் வரவேற்கிறேன் ஆதரிக்கிறேன் அனால் கொஞ்சம் முதிர்ச்சியுடன் சிந்தனையாளர்களாகிய நாம் ஏன் கொஞ்சம் மாற்றி யோசிக்க கூடாது என்கிற எண்ணம் எனக்குள் ஏற்படுகிறது.


ஆம் 2010ல் கள்ளர் சமூகம் விடுத்த கோரிக்கையை ஏற்று 2014ல் நிறைவேற்றுவதாக முதலவர் கூறி இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பே எமக்கு தெரிந்த விடயம் இன்று பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வாயிலாக எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயம் கருதி அ.தி.மு.க இதை இந்த சமயத்தில் செய்வதன் மூலம் அந்த சாதி மக்களின் ஆதரவை பெற முடியும் என்கிற நம்பிக்கையில் சுய விளம்பரம் செய்கிறது அதுதான் உண்மையும் கூட.


அதே தேர்தலை நாம் நமக்கு சாதகமாக உங்கள் ஓட்டு என்கிற ஆயுதத்தை கொண்டு பயன்படுத்த முடியும். உங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் என யார் வந்தாலும் அவர்களை தடுத்து நிறுத்தி எமது கோரிக்கையாக இதை வையுங்கள்: -

1. இமானுவேல்சேகரன் தேவேந்திரர் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்கும் கட்சிக்கே எங்கள் ஓட்டு.

2. அனைத்து மாவட்ட தலைநகரங்களின் மைய பகுதியில் அய்யா இமானுவேல்சேகரன் தேவேந்திரர் சிலை நிறுவ அனுமதி வழங்குபவர்களுக்கே எங்கள் ஓட்டு.

3. எங்கள் சமூகத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசானை வெளியிட்டு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எம்மை நீக்கி பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்ததபட்டோர் போன்ற பட்டியலில் எங்களை இணைத்து எங்கள் சமூகத்திற்கு தனித்துவத்துடன் உள் இட ஒதுக்கீடு வழங்க ஒத்துக்கொள்ளும் கட்சிக்கே எங்கள் ஓட்டு.

4. தேவேந்திரர்கள் வழங்கிய நிலத்தில் அமைந்திருக்கும் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அய்யா இமானுவேல்செகரன் தேவேந்திரர் பெயரை நிறுவ ஒத்துகொள்ளும் கட்சிக்கே எங்கள் ஓட்டு.

என்பன போன்ற கோரிக்கைகளை இன்று வையுங்கள் அரசியல் ஆதாயம் கருதி நாளையோ நாளை மறுநாளோ கண்டிப்பாக நிறைவேற்றப்படும் புத்திசாலிகளான நாம் இதை தான் செய்ய வேண்டும் அதைவிடுத்து ஒருதலை பட்சமாக செயல்படும் ஜெயலிதாவை கண்டிக்கிறோம் என்று வசைபாடுவதால் என்ன பெரிதாக நடந்துவிட போகிறது.

எமக்கும் கள்ளர்களை போல் மக்கள் பலம் இருக்கிறதென்றால் அந்த மக்கள் செல்வாக்கை கொண்டு எமது கோரிக்கையையும் நிறைவேற்ற முதல்வரை நிர்பந்திப்பது தானே சரி அதை விடுத்து அவதூறு செய்வது எந்தவிதத்தில் நியாயம் சிந்தித்து பாருங்கள் சொந்தங்களே.

தேவேந்திர குல வேளாளர் சமூகம் முட்டாள்களின் கூடாரம் அல்ல ஆக்கப்பூர்வமாக செயல்படும் அறிவாளிகள் நிறைந்த சமூகம் ஆதலால் ஆளும் கட்சிகளை எதிர்த்து எம் சமூகத்தை மேலும் தாழ்நிலைக்கு தள்ள முற்படுவதை விடுத்து அனுசரித்து சென்று எம் மக்களின் பலம் கொண்டு நிபந்தித்து எம் சமூக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மாற்றி முன்னேற்ற பாதைக்கு அழைத்துசெல்ல முற்படுவதுதான் சமூக உணர்வாளர்களின் கடமை அதை தான் சுயநலமற்ற எம் சொந்தங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது உங்கள் அன்பு சகோதரனின் வேண்டுகோள்.

சமூக உணர்வுடன்
பிரபு.ரா.வசந்த்ராம்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்