Home » » இனவெறியன் ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு:தமிழக கட்சிகள் போராட்டம்

இனவெறியன் ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு:தமிழக கட்சிகள் போராட்டம்

Written By DevendraKural on Monday, 26 May 2014 | 04:05



சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லி, திருப்பதி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி வைகோ தலைமையில் பேரணி மேற்கொள்ள மதிமுகவினர் முயன்றனர். அப்போது, வைகோவை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.


முன்னதாக, எம்.பி.,கணேசமூர்த்தி உள்பட 500க்கும் மேற்பட்ட மதிமுகவினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணிக்காக தயாராகினர். பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி பேரணி நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் வைகோ கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன்படி, தலைநகர் டெல்லி செல்வதை ராஜபக்ச தவிர்த்துள்ளார்.

அதற்குப் பதிலாக நேரடியாக ஒடிசா மாநிலத்தின் கட்டக்கிற்கு வந்துள்ளார். அங்கிருந்து தனியார் பிரத்யேக விமானத்தில் பிகாரில் உள்ள புத்த கயா செல்லும் அவர், இன்று மாலை திருப்பதி செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக திருமலைக்கு செல்லும் ராஜபக்ச, இரவு மலையிலேயே தங்குகிறார். நாளை அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்யும் அவர், காலை ஒன்பது மணிக்கு சிறப்பு விமானத்தில் கொழும்பு புறப்பட்டு செல்கிறார். 

திருப்பதியில் 144 உத்தரவு:  ராஜபக்ச வருகையை ஒட்டி திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேணிகுண்டாவில் இருந்து திருமலா செல்லும் வழியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து திமுக உள்ளிட்ட டெசோ அமைப்பினர் கறுப்புச்சட்டை அணிந்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். 


தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்பாட்டம் : சிங்கள வெறியன் ராஜபக்ஸயின் இநதிய வருைகைக்கு எதர்ப்பு தெரிவித்து நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க சென்ற நெல்லை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் கண்மணி மாவீரன் தலைமையில் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: இதுதவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராஜபக்சவின் வருகையை கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாட்டு சட்டப்பேரவை வாயிலில், புதியதமிழ்நாட்டும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ராஜபக்ச இந்திய வருகையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

செய்தி வழிமூலம் : புதியதலைமுறை தொலைக்காட்சி
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்