Home » » புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்

Written By DevendraKural on Sunday, 15 June 2014 | 08:13“புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்” என்ற உண்மையான வரிகளுக்கு சொந்தக்காரரான சே குவேரா இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும், கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன்.
1928ம் ஆண்டு யூன் மாதம் 14ம் திகதி ஆஜர்ண்டினாவில் பிறந்த இவர், இன்று உலகில், ஆங்காங்கே உருவாகும் புரட்சியாளர்களுக்கு சிம்மாசனமாய் வீற்றிருப்பவர்.
சிறுவயதில் இருந்தே கவிதைகள் எழுதுவது, நூல்கள் வாசிப்பது என பல்வேறு ஆர்வங்களை கொண்டிருந்த இவர், 1948ம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக புவனஸ் அயர்ஸ் பல்கழைக்கழகத்தில் சேர்ந்தார்.
ஆனால், அதனை மேற்கொண்டு தொடராமல் 1951ம் ஆண்டு தென் அமெரிக்கா முழுவதும் தனது நண்பருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், சேவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட பயணம் அது.
தென் அமெரிக்கா கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு போன்றவற்றில் மூழ்கி கிடந்தன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும், வோஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரணம் எனக் கண்டறிந்தார்.
பின்னர் 1953ம் ஆண்டு பொலிவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்த குவாதமாலா என்ற பகுதியில் அமெரிக்கர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதை கண்டு தீவிரமாக செயல்பட்டார்.
ஆனால் இவரது திட்டம் தகர்த்தெறியப்பட்டு கியூபா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு இவரது எண்ணங்களால் நிக்கோ லோபஸ் எனும் கியூபா போரராளி ஒருவர் வசீகரிக்கப்பட்டார்.
அப்போது கியூபாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர சே குவேரா கியூபா புரட்சியில் பங்கெடுத்தால் போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று நம்பினார்.
இந்த இரண்டு மகத்தான சக்திகள் இணைந்து கியூபாவின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டனர். தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று.
இதனால் தான் சே குவேரா மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.
பல திட்டங்கள் தீட்டப்பட்டு, கியூபாவை வென்று தனது வீரத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனைத் தொடர்ந்து கியூபாவில் தேசிய வங்கியின் அதிபராகவும், விவசாயத் துறைத் தலைவராக நியமக்கப்பட்ட இவர், தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார்.
ஆனால், சில காலங்களுக்கு பிறகு, கியூபாவில் நிகழ்ந்த சில மாற்றங்கள் இவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டதால், அந்நாட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை துறந்து பொலிவியாவிற்கு தஞ்சம் புகுந்தார்,
அங்கு சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு, தனது பங்களிப்பினை செலுத்தியதால் சிஐஏ அமைப்பின் கடுங்கோபத்திற்கு ஆளானார். இதன் பின்னர் இவரை சுற்றிவளைத்த அமெரிக்கா அவரை சுட்டுக்கொல்ல முடிவு செய்தது.
கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார் சே. அப்போது காலில் குண்டடி பட்டிருந்தபோதும், தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்து, “ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்”.
இதுவே சே குவேரா மண்ணில் உதித்த கடைசி வார்த்தைகள், வாழ் நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி பறந்த ஒன்பது தோட்டாக்களில், ஒரு தோட்டா அவரது இதயத்துக்குள் ஊடுருவியது.
சே.குவேரா மரணத்திற்கு பின்னரும் உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்