Home » » 2014-2015 ஆண்டின் நிதிநிலை அறிக்கையை பாராட்டுகிறோம்...

2014-2015 ஆண்டின் நிதிநிலை அறிக்கையை பாராட்டுகிறோம்...

Written By DevendraKural on Friday, 11 July 2014 | 23:58

இயற்க்கை சார்ந்த விவசாய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த 2014-2015 ஆண்டின் நிதிநிலை அறிக்கையை பாராட்டுகிறோம்...

அருண் ஜெட்லி...

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நரேந்திரமோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. கடந்த 50 ஆண்டு காலம் நிலவிய சிக்கலான பொருளாதார நிலையிலிருந்து முழுமையாக விடுபட்டு மாறுபட்ட ஒரு நிலையை, குறுகிய காலத்தில், எளிதில் எட்டிவிட முடியாது என்பதை நன்கு உணர்ந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தமது பட்ஜெட் உரையின் துவக்கத்திலேயே, "எனக்கு முன் இருந்தவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சில இலக்குகளை நிர்ணயித்து வரி விதிப்புகளைச் செய்துள்ளனர்; நான் அந்த நிலையிலிருந்து உடனடியாக மாறிச் செல்ல முடியாதென்பதால், அவர்கள் நிர்ணயித்த இலக்கையே குறியாக கொண்டு, இயன்ற அளவுக்கு பொருளாதாரத்தைச் சீரமைக்கும் வகையில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம்....

நீர்ப்பாசனம் பெருக்கிட ஆயிரம் கோடி...

குறுகிய கால ஊரக மறு சுழற்சி நிதி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு.

கிராமப்புற தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

ரூ.8 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு

கங்கை நதியை தூய்மைப்படுத்தி, மேம்படுத்த ரூ.2037 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ.14,389 கோடி பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

விவசாயிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். விவசாய கடன்களை சரியாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3% ஊக்கத் தொகை வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.8 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறையில், 4% வளர்ச்சியை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.

நிலமில்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு 'நபார்ட்' வங்கி மூலம் நிதியுதவி வழங்க பரிந்துரை.

கிராமங்களில் மின்சார வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும்.

விவசாய சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.

தெலுங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

இயற்க்கை தான் மனித வாழ்வின் ஆதாரம்... விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெழும்பு என்பதை உணர்த்தும் நிதிநிலை அறிக்கைக்கு மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்