கேம்பிரிஜ் இளவரசர் வில்லியம் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் முழு நேர விவசாயப் பாடநெறியை ஆரம்பித்துள்ளார்.
நேற்று பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தை அடைந்த இளவரசரை சக மாணவர்கள் அன்புடன் வரவேற்றதாக பிபிசி அறிவித்துள்ளது.
கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் விவசாய முகாமைத்துவம் என்ற பத்துவார கால கற்கை நெறியை இளவரசர் தொடர்வார். கோர்ன் வோல் அரண்மனையில் இருந்து தமக்கு கிடைக்கக்கூடிய தோட்டங்களை பராமரிப்பதற்கு உதவும் வகையில் கற்கை நெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- செய்தி ஆசிரியர்
- படங்கள் நன்றி: பிபிசி
- படங்கள் நன்றி: பிபிசி