Home » » 57வது குருபூஜை - மள்ளர் சொந்தங்களிடம் ஒரு வேண்டுகோள்..

57வது குருபூஜை - மள்ளர் சொந்தங்களிடம் ஒரு வேண்டுகோள்..

Written By DevendraKural on Tuesday, 2 September 2014 | 03:04

57வது குருபூஜை - சொந்தங்களிடம் வேண்டுகோள்....
தேவேந்திரர்களின் புனித பூமியாம் பரமக்குடியில் அய்யா இமானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நாளான செப்டம்பர் 11ல் லட்சோப லட்சம் தேவேந்திரர்கள் கூடுகிறோமே அன்று என்ன செய்தால் அரசு எமது பலத்தை / தேவையை உணர்ந்து எமது கோரிக்கைகளை நிறைவேற்றும்?
1. எங்கிருந்தாலும் அன்று ஒருநாள் பரமக்குடி வருவதை தேவேந்திரர்களின் கடமை என கொள்ளுங்கள். வருபவர்கள் கட்டுகோப்பான நாகரீகத்துடன் எம் சமூகத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட அய்யாவின் திருக்கோவிலில் அவரை மானசீக குருவாக ஏற்று அவர் வழியை பின்பற்றி சேர சோழ பாண்டிய மரபினராக ஆண்ட எம் சமூகத்தின் மீது படிந்துள்ள இன்றைய இழிநிலையை போக்க சபதமேற்றுக்கொளுங்கள். தயவு செய்து யாரும் மது அருந்திவிட்டு வராதீர்கள்.
2. தென்னகத்தில் இரு சமூகங்களுக்கு இடையே நடக்கும் ஆதிக்க போட்டியில் எமது சிறப்பான செயல்பாடுகளால் பண்பிலும் பழக்கவழக்கதிலும், நாகரீகத்திலும் பண்பாட்டிலும் வானளவு சிறந்தவர்கள் தேவேந்திரர்களே என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.
3.கூடும் கூட்டத்தை வைத்து அதை அரசியல்படுத்தி ஆளும் / எதிர் கட்சிகளே தேவேந்திரர்களின் ஒட்டு வேண்டுமென்றால் எமது நெடுநாள் கோரிக்கைகளான
3.1 அய்யா இமானுவேல் சேகரனாரின் விழாவை அரசுவிழாவாக அறிவித்திடு
3.2. எங்கள் சமூகத்தின் பல உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்திடு
3.3 பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திரர்களை நீக்கி தனி உள் ஒதுக்கீடு வழங்கி தனி நல வாரியம் அமைத்திடு.
3.4 மதுரை பன்னாட்டு விமானநிலையதிற்கு அய்யா இமானுவேல் பெயரை சூட்டிடு
என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பெயர்பலகைகளை சுமந்து அன்றைய ஒன்றுகூடல் நிகழ்வை அரசுக்கும் மக்களுக்கும் செய்தி பரிமாறும் நிகழ்வாக மாற்றுங்கள்.
கூட்டம் காட்டுவது எமது நோக்கமாக இருக்க கூடாது எமது எண்ணிக்கை பலம் என்ன என்பதையும் எமது மூர்க்க குணம் என்ன என்பதையும் உலகே அறியும் அதை எமது புனித பூமியான பரமக்குடியில் தான் உணர்த்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை ஆதலால் இந்த ஒன்றுகூடல் நிகழ்வை சிந்தனை திறனை தூண்டும் ஒரு செய்தி பரிமாறும் நிகழ்வாக மாற்றி எமது மக்களுக்கு செய்தியையும் அரசுக்கு வேண்டுகோளையும் விடுக்க நமக்கு கிடைக்கும் தளமாகவும் களமாகவும் பயன்படுத்த வேண்டும்.
4. முக்கியமாக வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் குருபூஜை விழாவிற்கு வருபவர்கள் உங்கள் மாவட்டத்தில் ஒன்றாக ஓரிடத்தில் வாகனங்களை வரவழைத்து தக்க பாதுகாப்புடன் காவல்துறையோடு அணிவகுத்து வந்து செல்லுங்கள்.

வேண்டுகோள்கள் தொடரும்...

என்றும் அன்புடன்
உங்கள் அன்பு சகோதரன்
லாந்தை.ரா.பிரபு

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்