Home » » உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை – டாக்டர்.க.கிருஷ்ணசாமி 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை – டாக்டர்.க.கிருஷ்ணசாமி 

Written By DevendraKural on Tuesday, 2 September 2014 | 13:33


புதியதமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று (02-09-2014 ) புதியதமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறியதாவது:-

தீர்மானம் 1:-
மறைந்த தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைகள் பாரபட்சமாக இருப்பதை புதிய தமிழகம் கட்சி கண்டிகிறது.
குறிப்பாக ஒருசில தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாகனங்களில் வருவதை அனுமதிக்கும் அரசு ஒடுக்கப்பட்ட மிகமிக பின்தங்கிய சிறுபான்மையினர் தலைவர்களின் விழாவிற்கு வாடகை வாகனங்களில் வருவதை தடைசெய்கிறது. இது ஒரு தலை பட்சமானது, ஜனநாயக விரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலிக்கு வருகைதரும் ஆர்வலர்களின் வாடகை வாகனங்களுக்கு அரசு எந்த தடையையும் ஏற்படுத்தக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 :-
அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் (Grassroots democracy) எனும் வேர்களால் ஜனநாயம் வலுப்படுத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கு உரிய பங்கு கிடைக்கப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு அங்கம் ஆக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மாநில அரசும் அதற்கு ஒத்தூதும் மாநில தேர்தல் ஆணையமும் தமிழகத்தின் பிற கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் அளிக்காத வண்ணம் ஆளுங்கட்சிக்கு மட்டுமே துணை போகக்கூடிய வழியில் தேர்தல் தேதிகளை அறிவிப்பது, தேர்தலை நடத்துவது, தேர்தல் முடிவுகளை அறிவித்துக் கொள்வது என்ற ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுவதை புதிய தமிழகம் கண்டிக்கிறது.

           இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குண்டான போதிய அவகாசம் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் அளிக்காத காரணத்தாலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தேர்தல் ஆணையத்தினுடைய செயல்பாடுகள், ஆளுங்கட்சியின் செயல்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது எந்த விதத்திலும் நாட்டு மக்களுக்கோ,ஜனநாயகத்திற்கோ பயன் அளிக்காது என்ற அனுபவத்தின் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சி உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கிறது என கூறினார்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்