Home » » சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி!!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி!!

Written By DevendraKural on Saturday, 27 September 2014 | 07:00

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.
ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அதிமுகவினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
சிறிய அளவில் உள்ள காவலர்களும் அதிமுகவினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர்.
மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு வரும் வோல்வோ பேருந்துகளை ரத்து செய்துள்ளது.
மேலும் சில தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதோடு சாலையில் பேரூந்துகள் எரிக்கப்பட்டு கடைகளும் எரிக்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா பதவி விலக வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
ஜெயலலிதா பதவி விலக வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அவர் குற்றவாளியென்று தீர்ப்பளித்துள்ளது. 
இத்தீர்ப்பின் அடிப்படையிலும், சட்டப்படியும் செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக வேண்டும். பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை, லஞ்சம் ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.
இத்தீர்ப்பையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள், பொதுச்சொத்துக்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியை பாதுகாக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 
கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவையும் ,அவருடன் சேர்ந்து சசிகலா உட்பட மூவரையும் குற்றவாளிகள் என்று சற்றுமுன் தீர்ப்பு வழங்கியுள்ளது..
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டால்..அறிவிக்கப் பட்டதுமே ஜெயலிதா இன்றைய இந்தியச் சட்டப்படி உடனே பதிவியை இழப்பார்.அதாவது மேற்படி குற்றங்களுக்கு குறைந்தது 2 வருட சிறையும்,அபராதமும் விதிக்கப் படலாம் என்று நம்ப படுகிறது..
ஆனால்..ஜெயலிதாவை இன்றே ஜாமீனில் வெளியில் எடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகியுள்ளன.!.
குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதுமே,எப்படியான தண்டனை என்பதுதான் இப்போதுள்ள கேள்வி?..அதற்கான வாதங்களும் எதிர் வாதங்களும் நீதி மன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
மூன்று வருடங்களுக்குள் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப் பட்டால்..அவர் வெளியில் ஜாமீனில் வெளிவர முடியும் என்று சட்டம் சொல்கிறது..அது மட்டுமல்ல ,மேல்முறையீடு உயர்நீதி மன்றத்தில் செய்து, உயர் நீதிமன்றம் மூன்று மாதத்தில் அவரருக்கு ஜாமீன் வழங்கினால், அவர் அதன் பின் முதல் அமைச்சர் பதவியை முழுத் தீர்ப்பு வரும்வரை வகிக்கமுடியுமாம்!ஆனால்..மூன்று வருடத்துக்குமேல் தண்டனை கிடைத்தால் அதற்கும் ஜாமீன் கிடைக்குமாம் .ஆனால், அதுவரை அவர் சிறையில்தான் இருக்கவேண்டும் என்பதுடன், முழு தண்டனை விபரம் வரும்வரை அவர் திரும்ப பதவி வகிக்கமுடியாது!எனவே, இன்றைய நிலையில் ஜெயலிதா பதவி இழப்பது என்பது இன்று பெரும்பாலும் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகி விட்ட நிலையில், அடுத்த முதல்வர் ஒருவர் அ.தி .க.வில் இருந்து தெரிவு செய்யப்படுவார்.
அப்படி ஓர் நிலை வருமென்றால், அடுத்த முதல்வர் திரு பன்னீர் செல்வமாக இருக்குமா? என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்?

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்