Home » » ஜெயலலிதா குற்றவாளி-முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

ஜெயலலிதா குற்றவாளி-முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

Written By DevendraKural on Sunday, 28 September 2014 | 02:30


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். மன்னார்க்குடி குடும்பத்தின் உறவுதான் ஜெயலலிதாவை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஆசை, ஆசை, வரம்பு மீறிய ஆசை. வளர்ப்பு மகனுக்கு 5 கோடியில் திருமணம். 5 ஆண்டுகளில் 66 கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளார். ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று நீதிபதி குன்ஹா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.மேற்கண்ட நால்வருக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் தலா நான்கு வருட சிறைத் தண்டனை என்று அறிவிக்கப் பட்டதோடு நால்வருக்கும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.ஜெயலலிதாவுக்குப் 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும் 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்துள்ளார். கூட்டு சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்று, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் உடனடியாகத் தமது முதல்வர் பதவியையும், எம் எல் ஏ பதவியையும் இழக்கிறார் ஜெயலலிதா. மேலும் 6 ஆண்டுகள் எந்தவிதத் தேர்தலிலும் போட்டியிடத் தடையும் விதிக்கப்படுகிறது.

சொத்து விவரம் :

இதனிடையே சென்னயிலிருந்து வெளியாகும் ஓர் ஆங்கில நாளேட்டில், ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து வந்த செய்திக்கு பதிலளிக்கும் வகையில், அவர் தனது அசையும் சொத்தின் மதிப்பு 13 கோடியே 3 லட்சத்து 77 ஆயிரத்து 929 ரூபாய், அசையா சொத்தின் மதிப்பு 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், ஆக மொத்த சொத்தின் மதிப்பு 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 929 ரூபாய் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இவ்விவரங்களை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோதே தெரிவித்ததாகவும், முதல்வரான பிறகு எதுவும் வாங்கவில்ல என்றும் சட்டமன்றத்தில் சென்ற திங்களன்று தெரிவித்தார்.


After 18 years of discussions and arguments at the age of 66 an intelligent good lady become a victim for bad friendship.

கன்னடர்களின் கொண்டாட்டம் :

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக செயல்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தமிழகத்துக்கு ஜெயலலிதா தண்ணீரை கொண்டுவந்ததாக கன்னட அமைப்புகளுக்கு கோபம் இருந்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு முறை பேட்டியளிக்கும்போதுகூட, ஜெயலலிதா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, காவிரி பிரச்சினையில் மிகுந்த ஆக்ரோஷம் காண்பிக்கிறார். கருணாநிதி இந்த விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பார் என்று தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனையை கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மைசூரில் கொண்டாடினர்.

செல்வி ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஓரளவு
ஊடகக்காரர்கள் ஊகித்தது போலவே இருந்தது. தமிழ் நாட்டில் அதிமுக
தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருப்பதைத் தொடர்ந்து அனைத்து
தொலைக்காட்சிகளும் காட்டிக்கொண்டிருந்தன.

இந்த தீர்ப்பின் மூலம் , நாட்டில் அரசியல் வாழ்வில் குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படுவார் என்பதை ஒரு பாடமாக
பிற அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தலைவர்களின் வாரிசுகளும் (தலைவர்களின் வாரிசுகள் என்பது நான் சேர்த்துக்
கொண்டது!) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சில நீதிமான்கள்
அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்தச் செய்திகள் எதுவும்
அதிர்ச்சி தரவில்லை. ஆனால் இந்த தீர்ப்புக்குப் பின் சொல்லாத
சேதியாக இன்னொரு செய்தியும் இருந்தது.
அது தான் பிஜேபி அரசியல்.

புதிய தலைமுறை நேரலையில் தொலைபேசி தொடர்பில் வந்த
தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் " பிஜேபி நீதித்துறையில்
தலையிடவில்லை என்பதற்கு இந்த தீர்ப்பு ஓர் உதாரணம்"
என்கிறார்.
இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் அழுகிறார்கள், நாளை
திமுக தொண்டர்கள் அழுவார்கள் என்கிறார் இன்னொரு
பிஜேபிக்காரர்
#
.60 கோடிக்கு 4 வருடம், 100 கோடி அபராதம் என்றால்
200 கோடிக்கு எத்தனை வருடம்? எவ்வளவு அபராதம?
திமுகாவுக்கும் இந்த தீர்ப்பு இனிப்பு வழங்கி கொண்டாடப்
பட வேண்டிய தீர்ப்ப அல்ல. இனி, அவர்களுக்கும்
தலைவலி தான்.

வழக்கை கொண்டுவந்த சுப்பிரமணிய சாமி
"திமுகவும் அதிமுகவும் .. இரண்டும் ஒன்றுதான். இதுதான்
தமிழ்நாட்டில் பிஜேபி வளர்வதற்கான சரியான நேரம்"என்கிறார்.
சுப்பிரமணிய சாமி சொன்னதையும் இந்த தீர்ப்பின் முடிவையும்
தொடர்பு படுத்தாமல் இருக்க முடியவில்லை.
சுப்பிரமணிய சாமி இதுவரை எத்தனையோ வழக்குகளை
இந்திய தலைவர்கள் பலர் குறித்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். போபர்ஸ் பீரங்கி வழக்கு நினைவுக்கு வருகிறது.
அதிலெல்லாம் காட்டாத முனைப்பு இந்த வழக்கில் காட்டப்பட்டதும்
ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது. ( நான் அதிமுக அனுதாபி
கூட கிடையாது.)

திராவிட அரசியலுக்கு மாற்று பிஜேபி அரசியல் அல்ல
என்பதை தமிழகம் எப்படி உணர்த்தப் போகிறது?
இடதுசாரிகளும் பெரியாரியக்கங்களும் இச்சூழலை எப்படி
கையாளப் போகிறார்கள்? தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடு
என்ன?
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்