Home » » தேவேந்திரர்களே…

தேவேந்திரர்களே…

Written By DevendraKural on Sunday, 12 October 2014 | 09:01

நன்றாக சிந்தித்து பாருங்கள் தேவேந்திரர்களே…
கீழவெண்மணி, உஞ்சனை, தாமிரபரணி, பரமக்குடி போன்று எத்தனையோ இழப்புகளை நாம் சந்த்தித்து விட்டோம் ஆனால் எம்மால் சமூக மாற்றத்தையும் அரசியல் அதிகார பகிர்வையும் பெறமுடியவில்லையே ஏன்? அரசுகளும் எமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. அப்படியானால் எமது போராட்ட முறையில் எதோ தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம்.
ஆம் எம் சமூக எழுச்சிக்காகவும் சமூக மாற்றத்திற்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த தியாகிகளை போற்றும் நாம் அவர்களின் தியாகத்திற்கு கைமாறாக ஏதாவது ஒரு குறிக்கோளை லட்சியத்தை நோக்கி போராடியதுண்டா? பாதிக்கப்படும் போது காக்கைகளை போல் கூடி ஆளும் அரசுகளை நோக்கி ஒழிக கோசமிடுவதோடும், இளம் ரத்த துடிப்பில் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைப்பதோடும் முற்றுபெற்று விடுகிறது எமது போராட்டங்கள். இது போக தலைவர்களின் ஆதரவாளர்கள் என்கிற ஒற்றை சொல்லில் சிதைந்து விடுகிறது எம் சமூகத்திற்கான அத்துனை போராட்டங்களும்.''
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்