Home » » எது ஆதிக்கம்?

எது ஆதிக்கம்?

Written By DevendraKural on Sunday, 23 November 2014 | 08:42

எது ஆதிக்கம்?

ஆதிக்கம் என்பது சர்வாதிகாரத்துடன்  அடுத்தவனை சண்டையிட்டு வீழ்த்தி பலத்தை உணர்த்துவது அல்ல என்பதை உணருங்கள் என் அன்பு சொந்தங்களே அது இன்றைய இந்திய தேசத்தில் சாத்தியமும் இல்லை.

ஆதிக்கம் என்பது பொருளாதரத்தில் முன்னேற்றம்கண்டு, அரசியல் அதிகாரத்துடன் சட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டில் நமக்கு சாதகமாக மாற்றுவது தான் ஆதிக்கம்.

தேவேந்திரர்களின் நோக்கம் ஒன்றாக இருக்கட்டும் அது அரசியல் அதிகாரத்தை வேன்றெடுப்பதாய் இருக்கட்டும் அரசியல் அதிகாரம் ஒன்று தான் ஜனநாயக நாட்டில் நாம் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை பெற்று தரும் என்பதை உணருங்கள் சொந்தங்களே...

சாதி அரசியல் செய்வது சாணக்கியத்தனம் அல்ல எம் சாதியின் பலத்தை பின்வைத்து ஆளும் அணைத்து கட்சிகளிலும் தவிர்க்க முடியாத சக்திகளாய் நாம் மாறுவது தான் புத்திசாலித்தனம் ஆதலால் இன்றே இணையுங்கள் நீங்கள் விரும்பும் ஆளும் அல்லது ஆண்ட கட்சிகளில்.

சாதி அரசியல் செய்து எம் சமூகத்தின் பிரதிநிதியாய் சட்டமன்றத்திற்கோ, பாரளுமன்றத்திற்கோ எம் சாதி தலைவர்கள் செல்லட்டும், தலைவர்களாய் முன்னிற்கும் அவர்களால் மட்டும் தான் சாதி அரசியலில் MLA வாகவோ MP யாகவோ ஆக முடியும். ஆம் தலைவர்களாலும், கட்சிகளாலும் சிதைவுண்டு கிடக்கும் எம் சமூகத்தில் பல MLA, MP க்களை உருவாக்கும் நிலையில் எம் தலைவர்களும்  இல்லை அவர்களது கட்சியும் பலமாக இல்லை அரசியல் அரங்கில் அவர்களுக்கு கிடைப்பதே அவர்கள் நிற்பதற்கான ஒரு சீட் தான் அதில் எங்கு அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணருங்கள்.

ஆதலால் தேவேந்திரர்கலாகிய நம் சமூகம் ஆதிக்க சக்தியாய் மாற ஆளும் கட்சிகளின் அங்கத்தினர்களாக தவிர்க்க முடியாத சக்திகளாய் மாறி எம் சாதி பலத்தை பின் வைத்து உங்கள் பகுதியில் நீங்கள் சார்ந்த கட்சியின் அடையாளமாக மாறுங்கள், நீங்கள் இல்லை என்றால் நீங்கள் சார்ந்த கட்சி தோற்கும் என்கிற நிலையை உருவாக்குங்கள் அது தான் ஆதிக்கம்.

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதில் தான் அடங்கி இருக்கிறது எமது சமூக மக்களின் இன்னல் தீர்க்கும் மூல மந்திரம், ஆதலால் என்ன விலை கொடுத்தேனும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி அதிகார வர்க்கமாய் மாறுவது மக்களாகிய நம் கையில் தான் உள்ளது.

களம் ஒன்றுதான் ஆட்டத்தின் போக்கை மட்டும் மாற்றினால் அரசியல் அரங்கிலும் வெற்றி நிச்சயமாக தேவேந்திரர் வசம் தான்.

குறிப்பு:- 

கட்சி சார்பற்ற சமூக உணர்வுள்ள சிந்தனையாளர்கள்  இணைந்து உங்கள் பகுதியில் அரசியல் களத்தில் நிற்கும் எம் சமூக சொந்தங்களுக்கு அரசியல் பயிற்சி வழங்கினால் சிறப்பாக இருக்கும். அரசியல் ஞானம் அதிகம் உள்ளவவர் முன்னெடுங்கள் என்றே வேண்டுகிறேன். 

- லாந்தை .ரா.பிரபு 

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்